மூட நம்பிக்கையை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும்..

by Staff / 17-06-2024 05:07:20pm
மூட நம்பிக்கையை விதைப்பவர்களை கைது செய்ய வேண்டும்..

சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று சொல்லி அரியலூரில் மூட நம்பிக்கையால் 38 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அவரது சொந்த தாத்தாவே கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசிய குழந்தைகள் நல செயல்பாட்டாளர் தேவநேயன், “இது போன்ற மூடநம்பிக்கைகளை விதைப்பவர்கள் மீது முதலில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் போன்ற ஆண் பெண் விகிதாச்சாரம் குறைவாக உள்ள மாவட்டங்களில் அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்” என்றார்.

 

Tags :

Share via