மலாவி துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்தில் 4 பேர் பலி

by Staff / 17-06-2024 04:51:18pm
மலாவி துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்தில் 4 பேர் பலி

மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா, கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல், நிட்செயு மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான நிசிபி கிராமத்திற்கு நேற்று ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் பலர் கலந்துகொண்டனர். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் நிலையில் ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒரு வாகனம் கூட்டத்தில் தறிகெட்டு ஓடியது. இந்த விபத்தில், கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 

Tags :

Share via