2.60 கோடிக்கு அதிகமான வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி பிடிக்க வேண்டும் - முதலமைச்சர் மு .க. ஸ்டாலின்
செங்கல்பட்டு திருவிடந்தையில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது அவர் வரும் சட்டமன்ற தேர்தல் என்பது இரு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டி அல்ல அது தமிழ்நாடு அனைத்தும் டெல்லி அணைக்கும் இடையிலான போட்டி என்று குறிப்பிட்டதோடு தமிழகத்தை ஆளப்போவது தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அல்லது டெல்லியில் இயக்கப்படுபவர்கள் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றும் திமுக அல்லாத வேறு எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதை டெல்லியில் இருந்து இயக்கப்படும் பாஜகவின் அரசாகவே இருக்கும் என்றும் அவர் எச்சரித்ததோடு ஒவ்வொரு முகவரும் தலா 40 முதல் 50 வாக்குகளை பொறுப்பேற்று செயல்பட வேண்டும் என்றும் இதன் மூலம் 2.60 கோடிக்கு அதிகமான வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி பிடிக்க வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினால் ஒருவேளை மாற்று அணியினர் வெற்றி பெற்றால் அப்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து மக்கள் நல திட்டங்களும் நிறுத்தப்படும் என்றும் அவருக்கு தெரிவித்ததோடு இந்த மாநாடு 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் களப்பணியை தொடங்கி வைக்கும் ஓர் களமாக அமைந்தது.
Tags :


















