பானிபூரி விற்று மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

by Staff / 11-08-2023 05:19:16pm
பானிபூரி விற்று மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் தரண்டகுக் மானே பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (36). இவர், பானிபூரி விற்று மாதம் ரூ.5 லட்சம் சம்பாதித்து இளைஞர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக மங்களூரில் மாநகர பஸ் டிரைவராக பணியாற்றிய மனோஜ், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பினார். வியாபாரம் செய்யும் ஆசை வந்ததும், வீட்டிலேயே பானி பூரி செய்து சாலையோர வியாபாரிகளுக்கு விற்க ஆரம்பித்தார். தேவை அதிகரித்ததால், மனோஜ் முழுநேர வேலையாக தனது வீட்டில் சிறிய தயாரிப்பு பிரிவையும் தொடங்கியுள்ளார். தினமும் குறைந்தது 40 கிலோ பானி பூரி தயாரிக்கிறார்.

 

Tags :

Share via