பிரபல ரௌடி சுந்தரராஜன்தலை துண்டித்து படுகொலை.

திருச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக ரவுடிகளின் நடமாட்டமும் மிரட்டல்களும் அதிகரித்துள்ளதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் காவல்துறையின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும் அரசியல் பலமிக்கவர்களால் தான் வீடு புகுந்து மிரட்டல்,கட்டபஞ்சயத்துக்களும் அதிகரித்துள்ளதாகவும் கூறப்ப்டுகிறது. இந்தநிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள பனையக்குறிச்சியில் பிரபல ரௌடி சுந்தரராஜன்,அவரது சித்தப்பா மணி என்பவரது வீட்டு மொட்டை மாடியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : பிரபல ரௌடி சுந்தரராஜன்தலை துண்டித்து படுகொலை