ரயில் மறியல் போரட்டம் சமாதன பேச்சுவார்த்தை தோல்வி.
திருவாரூர் நாகை போன்ற மாவட்டங்களை தென்னக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அனைத்து கட்சி சார்பில் நவம்பர் 28ம் தேதி முதல் தொடர் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இது குறித்து சமாதன பேச்சுவார்த்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருவாரூர்,கீழ்வேளூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் தென்கை ரயில்வே உதவி கோட்ட மேலாளர் தென்னக ரயில்வே முதுநிலை வணிக மேலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த பேச்சு வார்த்தையில் இரு தரப்பினரும் தங்கள் கருத்துகளை முன் வைத்த நிலையில் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.ரயில் மறியல் போராட்டக் குழு கொடுத்த கோரிக்கைகள் குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளிடம் அனுப்பி நாளை காலை 11 மணிக்குள் முடிவு தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.அதன் பிறகு போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
Tags :