அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியு-வில் கடந்த 2 வாரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 101 வயதான அவர், கடந்த ஜூன் 23 அன்று மாரடைப்பு மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்மையில் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
Tags :