விஜயினுடைய அரசியல் நகர்வு, எந்த மாதிரியாக இருக்கப் போகிறது....?

by Admin / 02-02-2024 06:04:18pm
விஜயினுடைய அரசியல் நகர்வு, எந்த மாதிரியாக இருக்கப் போகிறது....?

 தமிழ் திரை உலகில் இருந்து மற்றும் ஒரு நடிகர் அரசியல் களத்திற்குள்ளே புகுந்துள்ளார். மக்களின் மிகப்பெரிய செல்வாக்கு பெற்ற முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிற எம் கே தியாகராஜ பாகவதரை காங்கிரஸ் பேரியக்கம் தம் கட்சிக்குள்ளே இழுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பொழுது அவர் அரசியல் தனக்கு வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்.

.. அவரை அடுத்து மிக பெரிய செல்வாக்கை பெற்ற எம்.ஜி.ஆர் ,அறிஞர் அண்ணா..... திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கியதில் இருந்து தி.மு.க.வோடு நெருங்கிய தொடர்பை வளர்த்துக் கொண்டதோடு கட்சிக்குள்ளே ஒர். ஆளுமையாக மாறி அண்ணாவின் மறைவிற்கு பின்னர் கலைஞர் தலைமையில் தி.மு.க ஆட்சியும் கட்சியும் இயக்கிய பொழுது கட்சியின் பொருளாளராக எம்.ஜி.ஆர் திகழ்ந்தார்.. அது. மட்டுமின்றி அவர் எம்..எல்..சி ஆகவும் பதவி வகுத்திருந்தார்.

இந்நிலையில் ,தி.மு.கவில் கலைஞருக்கும் எம்.ஜி.ஆர்ருக்கும் ஏற்பட்ட முரண்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் ,எம். ஜி. ஆர் .கட்சியில் இருந்து வெளியேறி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். அவருக்கு பின்னால், எம்.ஜி.ஆருக்கு இணையாக நடிப்புலகில் இருந்த சிவாஜி கணேசன் காமராஜரோடும் காங்கிரசோடும் நெருங்கிய ஒருவராக இருந்தவர்.

முழு நேர நடிகராக இருந்து வந்த சிவாஜி காங்கிரஸ்.கட்சியோடு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததோடு தீவிரமான அரசியல் செயல்பாட்டாளராக அவர் மாறவில்லை..  .இந் நிலையில், அவருக்கும் முழு நேர அரசியல் தேவைப்படுகிற ஒரு சூழலை உருவாக்கினர்.. அதன் காரணமாக தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற ஒரு கட்சியை அவர் ஆரம்பித்தார்

.. எம்.ஜி.ஆர்ரை போல் தானும் ஒரு செல்வாக்கு மிக்கவராக திகழ முடியும் என்கிற நம்பிக்கையோடு தமிழகம் முழுவதும் வலம் வந்தார் ஆனால் ,அவருடைய சொந்த மாவட்டமான தஞ்சாவூரிலேயே அவரால் ஒரு தொகுதியில் எம்.எல்.ஏவாக கூட முடியவில்லை. அந்த காலகட்டத்திலேயே கட்சிக்காக இரண்டு கோடிக்கு மேல் செலவிட்டு விட்டேன் என்கிற ஒரு செய்தியையும் அவர் வருத்தத்தோடு பதிவு செய்தார்

.இவரை தொடர்ந்து டி. ராஜேந்தர் ,பாக்கியராஜ் ,சரத்குமார் , கருணாஸ், கார்த்திக்கமல், என பலரும் கட்சியை ஆரம்பித்து. அதை பலப்படுத்த முடியாமல் மக்களினுடைய பெருத்த ஆதரவை பெற முடியாமலும் இருந்த சூழலில்,

நீண்ட நாட்களாக தன்னுடைய ஆசை வைத்திருந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தைதொடங்கினார்.. .அவரும் தீவிரமான அரசியலில் ஈடுபட்டு அதிமுகவோடு கைகோர்த்து எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தார்

.அதற்குப்பின் ஜெயலலிதாவோடு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அவருடைய கட்சி வலுவிழந்தது. அவருடைய கட்சியில் இருக்கக்கூடிய எம்.எல்.ஏக்கள் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு கட்சிக்குள்ளே ஐக்கியமாயினர்.,

இந்நிலையில் நீண்ட நாட்களாக தங்களுடைய ரசிகர்களை உசுப்பேற்றி வந்த ரஜினிகாந்த் போன்றவர் கூட... இதோ கட்சி ஆரம்பிப்பேன்.. இதோ கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லி சொல்லி கடைசியில் தனக்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்று விலகிக் கொண்டார்.

இந்த நிலையில். இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்கிற ஒரு கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யக்கூடிய தருணத்தில் அறிவித்திருக்கிறார்.

தன்னுடைய ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கத்தினுடைய உட் கட்டமைப்பை போன்று பல்வேறு பிரிவுகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலிலும் அவருடைய ரசிகர் மன்றத்தைச் சார்ந்தவர்களை நிறுத்தி அவர்கள் வெற்றி பெற்ற நிலையையும் அவர் பார்த்ததால், இப்பொழுது 2026 இல் நடக்கப் போகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டு ஒர் . ஊழல் அற்ற ஒரு ஆட்சியை தமிழக மக்களுக்கு தரவேண்டும் என்பது போன்ற ஒர் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் .

கலைஞர்- எம்ஜி ஆர் ,ஜெயலலிதா- கலைஞர், மு க ஸ்டாலின்- எடப்பாடி ,இனி உதயநிதி ஸ்டாலின்- விஜய் என்பதாக அரசியல் யுத்த பயண களமாக மாறுமோ என்கிற நிலையில் அரசியல் ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்

விஜய்  கட்சி தமிழக மக்களிடம் எந்த அளவுக்கு ஆதரவை பெற்று அவர் தன் கட்சியை வலுப்படுத்தி ஆட்சி அதிகாரங்களில் அமர்வார் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ரசிகர் மன்றத்தின் வழியாக செய்த செயல்கள் என்பது வேறு அரசியல் இயக்கத்தை நடத்தி அதன் வழியாக வெற்றி அறுவடைகளை செய்வது என்பது வேறு அரசியல் மிக மிகப் பெரிய ஒரு சமுத்திரம் அந்தச் சமுத்திரத்தில் நீந்துவதற்கு நீண்ட ஒர் அரசியல் அறிவு என்பது தேவை

கடந்த ஆண்டு அரசியல் வியூக வகுக்கும் பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்ததாக தகவல் வந்ததை தொடர்ந்து...  இந்த ஓர் ஆண்டுகளில் அவர் தன்னுடைய அடுத்த கட்ட நகர்வுகளை எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று என்ன தோன்றுகிறது 2026 தேர்தலுக்குள் கட்சியை பலப்படுத்தி மக்கள் செல்வாக்கை பெற்று விடலாம் என்று அவர் திட்டம் வகுத்திருக்கலாம்

இந்த 2024 -பாராளுமன்றத் தேர்தல், தன்னுடைய கட்சி தொண்டர்களுக்கு ஒரு நேரடியான அரசியல் பயிற்சி களமாக இருக்கலாம் என்று கூட அவர் கருதி இருக்கலாம். இருப்பினும், விஜயினுடைய அரசியல் நகர்வு, எந்த மாதிரியாக இருக்கப் போகிறது என்பதை அவருடைய கட்சியினுடைய கொடி ,சின்னங்களை அறிவித்து மாநாடு நடத்துவதில் இருந்து நமக்கு புரிய வரும்.

 

 

Tags :

Share via