மீனவர் ராஜா சுட்டு கொல்லப்பட்டது பற்றி விசாரணை தேவை டாக்டர் ராமதாஸ்

தமிழ்நாடு மீனவர் ராஜா சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி பொய்யான தகவல்களை கர்நாடக வனத்துறை பரப்பி வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சேலம், கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த ராஜா என்ற மீனவரை கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளனர். மீனவர்கள் மான்வேட்டைக்கு சென்றபோது சுட்டதாக கர்நாடக வனத்துறை பொய்யான தகவலை கூறுவதாகவும், உயிரிழந்த மீனவரின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :