வயிற்று வலியை குணப்படுத்துவதாக கூறி சிறுமியை சிதைத்த பூசாரி கைது

by Editor / 10-06-2022 08:06:27am
வயிற்று வலியை குணப்படுத்துவதாக கூறி  சிறுமியை சிதைத்த பூசாரி கைது

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு வயிற்று வலி பிரச்சினை இருந்து வந்துள்ளதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த ஊராளி கருப்பர் கோயில் பூசாரி பழனி (65) சிறுமியின் தாயாரிடம், சிறப்பு பூஜை மூலம் அந்த சிறுமியின் வயிற்றில் வலியை குணப்படுத்திவிடுவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பி அந்த சிறுமியின் தாய் சிறுமியை பூசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாயாரை வீட்டின் வெளியே அமர வைத்துவிட்டு, வீட்டிற்குள் தான் குறி பார்க்கும் அறையில் சிறுமியின் வயிற்று வலியை போக்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறிவிட்டு, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதில் சிறுமி 3 மாதம் கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோயில் பூசாரி பழனியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : Priest arrested for mutilating girl

Share via

More stories

Logo