நாளை நீட் தேர்வு.. தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் எழுதுகிறார்கள்

by Editor / 11-09-2021 07:32:16pm
நாளை நீட் தேர்வு.. தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் எழுதுகிறார்கள்

கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதியான நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்பட உள்ளது.

இது ஒருபுறம் எனில் நாளை மறுநாள் அதாவது திங்கள் அன்நு நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

 

Tags :

Share via

More stories