இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை திறந்து வைத்து மாணவ, மாணவியர்களுடன் விளையாடினார்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, கொளத்தூர், வீனஸ் நகரில் ரூ. 7.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பிற்படுத்தப்பட்டோர் நலக் கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜெயந்தி நகர் பகுதிகளில் விடுபட்ட தெருக்களுக்கு ரூ. 19.56 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் உந்து நிலையம் அமைக்கும் பணி, ஜம்புலிங்கம் பிரதான வீதியில் இருந்து குமாரப்பா சாலை வரை ரூ. 37 இலட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் ஜி.கே.எம் காலனி 24ஆவது தெருவில் இருந்து பெரியார் நகர் நீரூற்று நிலையம் வரை ரூ. 97 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
. தீட்டி தோட்டம் முதல் தெருவில் ரூ. 1.27 கோடி செலவில் புனரமைக்கபட்டு, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்குகளை திறந்து வைத்து மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்களவழங்கி விளையாடினார்
கொளத்தூர், பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியிலிருந்து ரூ. 8.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 37 புதிய திட்டப் பணிகளுக்கு . பந்தர் கார்டன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 4.37 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட வுள்ள மறுசீரமைப்பு பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Tags :