சிலை திருடிய வாலிபர்

by Staff / 23-11-2022 04:20:22pm
சிலை திருடிய வாலிபர்

விழுப்புரம் அடுத்த ஆயந்துார் ஏரிக்கரை அங்காளம்மன் கோவில் பகுதியில் இருந்து நேற்று காலை 10: 45 மணிக்கு, 2 வாலிபர்கள் சாக்கு மூட்டையில் ஏதோ எடுத்துச் சென்றனர். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் ஏரியிலிருந்து மீன் திருடிச் செல்வதாகக் கூறி 2 பேரையும் விரட்டினர். சாக்கு மூட்டையை கீழே போட்டுவிட்டு ஓடியபோது, ஒரு வாலிபர் பொதுமக்களிடம் பிடிபட்டார். மற்றொருவர் தப்பியோடினார். பொதுமக்கள், சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது, ஒரு அடி உயர அம்மன் சிலை, 2 பாம்பு சிலைகள், 1 பித்தளை விளக்கு ஆகியவை இருந்தது தெரியவந்தது. தகவலறிந்த காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாலிபரை மீட்டு விசாரித்தனர். அதில், கண்டாச்சிபுரம் அடுத்த பரனுார் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரதீப், 22; என்பதும், இருவரும் அங்காளம்மன் கோவிலில் சுவாமி சிலைகளை திருடியது தெரியவந்தது. காணை போலீசார் வழக்குப்பதிந்து, பிரதீப்பிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய பரனுாரைச் சேர்ந்த சதீஷ், 29; என்பவரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via