குட்டி யானை பலி.. மற்ற யானைகள் பாசப்போராட்டம்
கோவை பாலமலையில் யானை வழித்தடத்தில் பங்களா ஒன்று உள்ளது. பங்களாவில் உள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியில் யானை குட்டி இறந்த நிலையில் மிதந்தது. இதையடுத்து தோட்டத்தில் இருந்த பணியாளர்கள் தொட்டியில் பார்த்த பொழுது அதில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். யானை குட்டியின் உடலை மீட்டவுடன் மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். அந்த குட்டி யானையை தேடி தாய் யானை மற்றும் மற்ற யானைகள் கூட்டம் கூட்டமாக அவ்விடத்திற்கு வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :