அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா

by Admin / 06-01-2022 04:35:02pm
அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளுக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்தியாவிலும், விமான பயணிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளுக்கு, விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில், 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது சுகாதாரத்துறையினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

 

Tags :

Share via

More stories