முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ் கொடுத்தனர்.

by Admin / 05-06-2022 01:13:41am
 முதலமைச்சர் மு க ஸ்டாலினை  நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ் கொடுத்தனர்.

தமிழ்த்திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் இருவரும் நான்காண்டுகளுக்கு மேலாகக் காதலித்து வந்ததோடு எக்மோரில் ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.கடந்த ஒரு வருடமாக  இருவரது  திருமணம்  குறித்த செய்திகள்  ஊடகங்கள்,சமூக ஊடகங்களில்  அதிகமாகப் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில்,கடந்த மாதம் தங்களுடைய திருமண தேதியை அறிவித்தனர். அதன் பிறகு விக்னேஷ் சிவனின் குல தெய்வக் கோவிலில் பொங்கலிட்டு முதல் அழைப்பிதழ் காமாட்சி அம்பாள் முன்  வைத்து  வணங்கினர். பின் திருமண அழைப்பிதழ்களைத் திரையுலக பிரபலங்களுக்கு வழங்கினர்இன்று தம் திருமண அழைப்பிதழ் முதலமைச்சர் மு க ஸ்டாலினை  நேரில் சந்தித்து நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன்கொடுத்தனர்.இந்த சந்திப்பின் போது  சட்டமன்ற உறுப்பினர்உதயநிதி ஸ்டாலின்  உடனிருந்தார். 

 

Tags :

Share via