கோவையில் ஆளுநரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

by Staff / 24-08-2023 02:08:50pm
கோவையில் ஆளுநரை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

இன்று கோவை பாரதியார் பல்கலைகழகத்தின் 38-ஆம் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர். என் ரவிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தினர் உடன் அனைத்து முற்போக்கு அமைப்புகள் இருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதனால் அப்பகுதியில் சிறுநேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வு எதிர்ப்பு உட்பட பல்வேறு தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றிய நிலையில் மசோதாக்களுக்கும் அனுமதி வழங்காமல் இருந்தார். தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்து இருந்த மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை என்று ஆளுநர் தெரிவித்து இருந்தார். தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறி தமிழகம் ஆளுநர் ஆர். என் ரவி கோவை வந்த போது அவருக்கு அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினார்கள்.

 

Tags :

Share via

More stories