பயங்கர வெடி விபத்து - உடல் சிதறி 4 பேர் பலி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வீட்டில் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலையில் நடந்த இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் பலத்த காயம் அடைந்தனர். இந்த வெடி விபத்தில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் துண்டு துண்டாக சிதறின. சிலரின் உடல் பாகங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags :