பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் பிரச்சாரம்

by Staff / 11-04-2024 12:54:14pm
பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் இளங்கோவன் பிரச்சாரம்

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருச்சியைச் சேர்ந்த இளங்கோவன்
வேட்பாளராக போட்டியிடுகிறார். நேற்று பெரம்பலூர் நகர் புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, வெங்கடேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பெரம்பலூருக்கு தேவையான அடிப்படை பிரச்சினைகளை எடுத்துரைத்து இவைகள் அனைத்தையும் சரி செய்யப்படும் என தெரிவித்து தங்களது சின்னமான யானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் காமராசு உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo