கழிவறையில் பெண் பாலியல் பலாத்காரம் - இளைஞர் கைது

by Staff / 20-04-2024 11:44:46am
கழிவறையில் பெண் பாலியல் பலாத்காரம் - இளைஞர் கைது

தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் பெண்கள் கழிவறையில் 35 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞராக இருக்கிறார். இவர், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி, ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது, ஏற்கனவே கழிவறையில் இருந்த சந்தீப் பாண்டே (21) என்பவர் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories