காதலர் தினம் தாலியுடன் எச்சரித்த இந்துமுன்னணி நிர்வாகிகள் 5 பேர் கைது.

by Editor / 15-02-2025 10:53:14am
காதலர் தினம் தாலியுடன் எச்சரித்த இந்துமுன்னணி நிர்வாகிகள் 5 பேர் கைது.

சிவகங்கை மாவட்டம் அருகே காதலர் தினத்தை முன்னிட்டு பேக்கரி கடையில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதனை கண்டித்தும், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது. பேக்கரி கடைக்கு ஜோடியாக வருபவர்களுக்கு திருமணம் செய்துவைப்பதாக கூறி கையில் தாலியுடன் சுற்றியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அக்னி பாலா, சுரேஷ், மாரியப்பன், தினேஷ்ராஜா, கார்த்திகேயன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

 

Tags : காதலர் தினம் தாலியுடன் எச்சரித்த இந்துமுன்னணி நிர்வாகிகள் 5 பேர் கைது.

Share via
Logo