சிறுமியை நாய்கள் கடித்து குதறிய விவகாரத்தில் அரசு நடவடிக்கை
சென்னை ஆயிரம் விளக்கு மடல் பள்ளி பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் இரண்டு தடை செய்யப்பட்ட நாய்கள் கடித்ததில் சிறுமி சுதக்ஷா படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பில் பேசிய மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “சிறுமியை கடித்த நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறாதது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பின்னர் கால்நடைத்துறை உடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Tags :



















