காலை முதல் நள்ளிரவு வரை மழை சேதங்களை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார். காலை 9 மணிக்கு ஆய்வு தொடங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி, நள்ளிரவு 12:30 மணி வரைக்கும் ஆய்வு செய்து பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி, மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்துதர நடவடிக்கை எடுத்தார். இன்றும் மழையால் பாடகிக்கபட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.தூத்துக்குடி நிலா மஹாலில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதன்தொடர்ச்சியாக செட்டியார் மஹால்,தங்கம்மாள் உயர் நிலைப் பள்ளி, காயல் பட்டினத்தில் தங்கக்கவைக்கப்பட்டுள்ள உள்ள பல்நோக்கு புகலிட மையத்தில் நிவாரண பொருட்களை வழங்கினார், மற்றும் கன மழையால் சேதமடைந்த டீச்சர்ஸ் காலனி பகுதி, குமரன் நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்குத் தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். தெற்கு ஆத்தூர்,தண்ணீர்பந்தல் வரண்டியவேல், தரைப்பாலம் பகுதி, நாககன்னிகாபுரம், புறையூர், கடம்பாகுளம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், காயல்பட்டிணம், கொம்புதுறை, தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு,நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் உடனிருந்தனர்.
Tags :