இபிஎஸ் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Tags :