5570 வழக்குகள் வாபஸ் - அரசாணை

by Editor / 14-09-2021 10:33:36am
5570 வழக்குகள் வாபஸ் - அரசாணை

 வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் திமுக அரசுஅறிவித்தது.

அதேபோல் மக்கள் போராட்டமாக பார்க்கப்பட்ட எட்டு வழிசாலை குடியுரிமை திருத்த சட்டம், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ, மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 2011 -2021 காலகட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், எட்டு வழிச்சாலை, கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்டவற்றில் தொடர்புடைய 5,570 வழக்குகளை திரும்பப் பெற்றதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. எட்டு வழி சாலை, மீத்தேன் மற்றும் நியுட்ரினோ ஆகிய திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 405 வழக்குகளும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய 2682 வழக்குகள், விவசாய சட்டத்திற்கு எதிராக போராடிய 2831 வழக்குகள், பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடிய 26 வழக்குகளும், கூடங்குளம் ஆலைக்கு எதிராக போராடிய 26 வழக்குகளும் சேர்த்து மொத்தம் 5570 வழக்குகள் தமிழக அரசால் திரும்ப பெறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via