பகுதி நேர ஆசிரியர் கண்ணன் விஷமருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழப்பு
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் விஷம் அருந்தி கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். சென்னை வானகரத்தில் திருமண மண்டபத்தில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர் ஆக்கவும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ,அவர்கள் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து பேச்சுவார்த்தை நிகழ்த்தினார். பேச்சுவார்த்தையில் ,அவர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் சம்பள உயர்வு அளித்து மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை செய்து நிரந்தரப்படுத்துவதற்கான வேலையை அரசு செய்யும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், பகுதி நேர ஆசிரியர் கண்ணன் விஷமருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் இழந்து உள்ளார். இவர் குடும்பத்திற்கு நிவாரண வழங்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர் சங்கத் தலைவர் முருகதாஸ் வலியுறுத்தியுள்ளார். அமைச்சரோடு பேசிய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாகவும் அவர் தொிவித்துள்ளார்.
Tags :


















