தலைமைச்செயலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலக ஊழியர்களுடன் இணைந்து பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினார். இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தமிழர் தம் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டனர். முதலமைச்சர் உரையாற்றும் பொழுது ,
தமிழ்நாடு முழுவதும் நாம் சமத்துவ பொங்கல் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திடும் நோக்கத்தோடு நம்முடைய திராவிடம் மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் .சொன்னால் உழைத்துக் கொண்டிருக்கிறது. உழைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொன்னால் நாங்கள் மட்டுமல்ல நீங்களும் சேர்ந்துதான் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் .தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் நீங்கள் எல்லோரும் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களோடு இந்த பொங்கலை கொண்டாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்என்று தெரிவித்தார்.
Tags :



















