by Staff /
06-07-2023
02:08:00pm
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருந்து விடுதலை பெற்ற முருகனை, அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி விடுதலையான அவரது மனைவி நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நளினி, முருகன் உள்ளிட்டோரை கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் விடுவித்தது. இலங்கையை தாய்நாடாக கொண்ட முருகன் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் உள்ளார். இந்நிலையில் அகதிகள் முகாமில் இருந்து அவரை விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
Tags :
Share via