by Staff /
06-07-2023
02:00:04pm
உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. அவர்களில் தெலுங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உஜ்ஜல் புயான் மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வெங்கடநாராயண பட் ஆகியோர் அடங்குவர். உச்ச நீதிமன்றத்தில் தற்போது 34 நீதிபதிகள் பதவிகள் உள்ள நிலையில், தற்போது 31 பேர் உள்ளதாகவும், தெலுங்கானா மற்றும் கேரளா தலைமை நீதிபதிகள் அனைத்து தகுதிகளும் பெற்றுள்ளதால் ஒருமனதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் தெரிவித்துள்ளது
Tags :
Share via