தீபாவளி பட்டாசுகள் வெடித்து காற்று மாசு உயர்வு.

by Staff / 21-10-2025 10:32:58am
தீபாவளி பட்டாசுகள் வெடித்து காற்று மாசு உயர்வு.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகத்திலும் மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கோலாகலமாக கொண்டாடினர். தீபாவளிக்கு அடுத்த நாள், இன்று காலை 6 மணி நிலவரப்படி, சென்னையில் காற்று மாசு அளவு சராசரியாக 154 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய தினத்தை விட (80) கணிசமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு காற்று மாசு கடந்த ஆண்டை விட கணிசமாக குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தீபாவளியின் போது சென்னையில் அதிகபட்சமாக 287 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags : தீபாவளி பட்டாசுகள் வெடித்து காற்று மாசு உயர்வு.

Share via