நாய் கடித்து 7 சிறுமிகள் படுகாயம்

by Staff / 27-03-2022 03:13:23pm
 நாய் கடித்து 7 சிறுமிகள் படுகாயம்

 
பரமக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியை சோ்ந்த சுகைனா, ஆப்ரின், தொகிதா, உள்ளிட்ட  ஏழு குழந்தைகள் விளையாடி கொணடிருந்தார்கள் என கூறப்படுகிறது.

அப்போது அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்கள் விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை கடித்துள்ளது.
 
இதனை கண்டு அதிா்ச்சியடைந்த பெற்றோர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதனால் இப்பகுதியில் உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின்  கோரிக்கை விடுத்துள்ளனா். 

 

Tags :

Share via

More stories

Logo