கட்டுக்கட்டாக பணத்தை எறிந்த பொறியாளரால் பரபரப்பு

ஒடிசா மாநிலத்தில் ஊரக வளர்ச்சி துறையின் தலைமை பொறியாளர் பைகுந்தநாத் ஷடாங்கிக்கு சொந்தமான 7 இடங்களில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.2.51 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை தொடங்கியவுடன், பைகுந்தநாத் தன் வீட்டிலிருந்து ரூ.500 நோட்டு கட்டுகளை பால்கனி வழியாக வெளியே எறிந்துள்ளார். பின்னர், அதிகாரிகளால் அவை மீட்கப்பட்டன. இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :