எலும்பு முறிவு ஏற்பட்டு பொதுத்தேர்வு எழுதிய மாணவி மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாத நிலையிலும் தந்தையின் உதவியுடன் வந்து பொதுத்தேர்வு எழுதி 12 ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பகுதியில் விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையையும் கற்கும் ஆர்வமும் முடியாமல் தேர்வுகளை எழுதி வரும் மாணவி சிந்துவை கண்டு பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டுள்ளா.ர் மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற தேவையான மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Tags :