கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி யை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராள மான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்ட னர். பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவி லில் தரிசனத்துக்காக பக்தர் கள் கூட்டம் லைமோதியது.கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தி லும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியா குமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராள மான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.
கடல் நடுவில் அமைந் துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகா னந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.
Tags :