கர்நாடகாவில் ஊழற்ற ஆட்சி - ராகுல் காந்தி

கர்நாடகாவில் ஊழல் இல்லாத தூய்மையான ஆட்சியை தருவோம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி, "ஊழல் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வந்தனர், இனி மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும். சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்பு ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சட்டம் இயற்றப்படும்" என்று கூறினார். மேலும் அவர் பெண்கள் இனி இலவசமாக பஸ்களில் பயணிக்கலாம் என்றும் தூய்மையான ஊழல் அற்ற ஆட்சியை தருவோம் என்று உறுதி அளித்துள்ளார்.
Tags :