திமுக பொதுக்குழு-போக்குவரத்து நெரிசலில் மதுரை சாலைகள்.

மதுரை உத்தங்குடியில் இன்று நடைபெற இருக்கும் திமுக பொதுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து சாரை சாரையாக காலை 6:00 மணி முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் வர துவங்கியுள்ளனர்
பல்வேறு வாகனங்களில் வந்த வண்ணம் உள்ள நிலையில் பொதுக்குழுகூட்டம் நடைபெறும் இடமான உத்தங்குடியில் இருந்து எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து வரிசையாக நின்றுவருவதால் திமுக தொண்டர்கள் மட்டுமின்றி மக்களும் அவதி.முதல்வரை பார்க்கு ஆசையிலும் தொண்டர்களும் குவியத்தொடங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
Tags : திமுக பொதுக்குழு-போக்குவரத்து நெரிசலில் மதுரை சாலைகள்.