திமுக பொதுக்குழு அதிகரிக்கும் திமுகவினர் வருகை

by Editor / 01-06-2025 09:01:35am
திமுக பொதுக்குழு அதிகரிக்கும் திமுகவினர் வருகை

மதுரை உத்தங்குடியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் திமுக பொக்குழு கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் காலை முதலே வர தொடங்கியுள்ளனர் அவர்களை காவல்துறையினர் பரிசோதித்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதித்து வருகின்றனர் இதில் திமுக தலைமை கழகத்தின் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஒன்றிய கவுன்சிலர்களுக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது அந்த கடிதத்தை காவல்துறையினரிடம் காண்பித்து அனுமதி பெற்று கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று வருகிறார்கள் அதேபோல் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் அடையாள அட்டை காண்பித்து கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கின்றனர் அனுமதிக்கும் இடத்தில் தொண்டர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் அவர்களை கூட்டத்தை கட்டுப்படுத்தி ஒவ்வொருவராக அனுமதித்து வருகின்றனர்

 

Tags : திமுக பொதுக்குழு அதிகரிக்கும் திமுகவினர் வருகை

Share via