தனது வீட்டின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றதாக புதின் ட்ரம்ப்பிடம் தெரிவித்தாா்.

by Admin / 30-12-2025 02:14:33pm
தனது வீட்டின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றதாக புதின் ட்ரம்ப்பிடம் தெரிவித்தாா்.

ரஷ்யா உக்ரைன் இடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிற நிலையில், அதிகாலை ரஷ்ய அதிபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வீட்டின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றதாக புதின் ட்ரம்ப்பிடம் தெரிவித்ததாகவும் இது அமைதி பேச்சு வார்த்தையை பாதிப்படையக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்.. இதற்கு ட்ரம்ப வருத்தம் தெரிவித்துள்ளதோடு,  நுட்பமான பேச்சு வார்த்தைக்கு தடையாக அமையும் என்று கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உ க்ரைன் அதிபர் இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்து இது முழுமையான கட்டுக் கதை என்றும் அமைதி பேச்சு வார்த்தைகளில் சமீபத்திய முன்னோக்கிய நிலையை பின்னடைவு செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு பொய்யான செயல் என்றும் கூறியுள்ளார். ரஷ்யாவும் தற்போதைய அமைதி ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தை நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்வதாகவும் எச்சரித்து உள்ளது. ஃப்ளோரிடாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைசந்தித்த உடனேயே இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது அங்கு அவர் ஒரு வரைவு அமைதி திட்டத்தில் சுமார் 90 விழுக்காடு உடன்பாட்டை எட்டியதாக கூறப்படும் நிலையில் ,இது போன்ற குற்றச்சாட்டால்  அமைதி உடன்பாட்டில் சிக்கல் தோன்றியுள்ளது.

 

 

Tags :

Share via