தன்னைப் பற்றி ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றச்சாட்டு
பாரதிய ஜனதா கட்சி கரூர் மாவட்ட தலைவர் வி. வி செந்தில் நாதன் கரூரில் நடைபெற்ற ஒரு போராட்டத்தின் போது தன்னைப் பற்றி ஆபாசமாகவும் இழிவாகவும் பேசியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார் .அவர் இது குறித்து வீடியோ காட்சிகளை தம் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . காங்கிரஸ் மாவட்ட தலைவர் அறிவித்த புகாரின் பேரில் கரூர் நகர காவல் துறையினர் செந்தில்நாதன் மீது பெண்களை துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய நியாய சங்கீத் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தில்நாதன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளாா். தாம் பயன்படுத்திய வார்த்தைகள் தவறான உள்நோக்கம் கொண்டவை அல்ல என்றும் இதற்காக மன்னிப்பு கேட்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது போன்ற தாக்குதல்கள் பொது வெளியில் இயங்கும் பெண்களை மிரட்டுவதற்காகவும் அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக எடுக்கப்படும் முயற்சி என்று ஒரு சாரார் குற்றம் சாட்டி உள்ளனர் .
Tags :



















