சட்டப்பேரவை தேர்தல் ரூ.707 கோடி மதிப்புள்ள அரிசி, லேப்டாப், சேலைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பறிமுதல்.
தெலங்கானாவில் தேர்தல் விதி மீறி ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.707 கோடி மதிப்புள்ள பணம், நகை, மற்றும் பொருட்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்.
தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் ஒரேகட்டமாக வரும் 30ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையில் வாக்காளர்களுக்கு பரிசுபொருட்கள் மற்றும் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள், தங்கம், வெள்ளி நகை மற்றும் தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை சார்பில் வாகன தணிக்கையின் போது 2 லட்சத்து 96 ஆயிரத்து 595 கிலோ அரிசி, 9,207 யூனிட் குக்கர்கள், 88 ஆயிரத்து 496 புடவைகள், 18,576 கடிகாரங்கள், 7 லட்சத்துக்கும் அதிகமான செல்போன்கள்,86 ஆயிரத்து 113 தையல் ஏந்திரங்கள், 86 ஆயிரத்து 115 மின்விசிறிகள், 40 டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதன்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் 26 ஆம் தேதி வரை ரூ 707 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், பணம், போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் ரூ .282 கோடிகட்டுக்கட்டாக ரொக்கப்பணம்,ரூ 186 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், ரூ 117 கோடி மதிப்புள்ள மது மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் பொருட்கள், ரூ 39 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்,ரூ 83 கோடி மதிப்புள்ள அரிசி, லேப்டாப், சேலைகள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags : Telangana election officials seized Rs 707 crore worth of money, jewelery and goods brought without documents in violation of election rules.