ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டிக்கு தீக்குளிக்க ஆலோசனை கொடுத்த பெண் கைது.

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் திங்கள்கிழமைத்தோறும் மக்கள்குறைகள் தீர்க்கும் முகாம் நடப்பதுவழக்கம்.இன்று வழக்கம் போல நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏராளமான பொதுமக்கள் ஆட்சித்தலைவரிடம் மனுக்கொடுக்க மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளிலிருந்து திரண்டுவந்த நிலையில் ஒருமூதாட்டி ஒருவர் தனக்கு உதவி கேட்டு மனுகொடுக்க வந்த நிலையில் அவர் அங்குள்ள பெண்ணிடம் மனுஎழுதிகேட்டுள்ளார்.அந்த பெண்ணிடம் தனது ஆதங்கத்தையும் தெரிவிக்கவே அந்தபெண்ணோ மூதாட்டியிடம் தற்கொலை முயற்சி நாடகம் ஆடினால் கோரிக்கை நிறைவேறும் என கூறி மனுவை எழுதிக்கொடுத்துள்ளார்.இதனைத்தொடர்ந்து மூதாட்டியும் அந்தபெண் கூறியதைப்போலவே மூதாட்டி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதன் தொடர்ச்சியாக அவரை கைப்பற்றிய காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் மனுக்கள் எழுதிக் கொடுக்கும் தங்கம் என்ற பெண்தான் இந்த ஆலோசனையை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து போலீசார் மனு எழுதிக்கொடுக்கும் தங்கம் என்ற பெண்ணை தற்கொலைக்கு தூண்டுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் தங்கம் என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags : ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டிக்கு தீக்குளிக்க ஆலோசனை கொடுத்த பெண் கைது.