ஓபிஎஸ் ஆதரவு அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறப்பட்டார். இரட்டை இலை சின்னம் எந்த வகையிலும் முடங்கி விடக்கூடாது என்பது தான் தங்கள் நோக்கம் என்றும் இரட்டை இலை வெற்றி பெற வாக்குகள் கேட்போம் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, பொதுக்கூட்டங்கள் வாயிலாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஓபிஎஸ் பரப்புரை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Tags :