அஜித் குமாரின் மரணத்தை மறைக்க ரூ.50 லட்சம் பேரம்?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையின்போது நீதிமன்றத்தில் பரபரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது, கொலையான இளைஞரின் உடலை பெற்றுக்கொள்ள திமுக ஊராட்சி தலைவரின் கணவரான சேங்கை மாறன், திமுக மகேந்திரன், திமுக நகர செயலாளர் காளீஸ்வரன், மானாமதுரை டிஎஸ்பி ஆகியோர் அஜித்தின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்குவதாக பேரம் பேசப்பட்டது என வாதாடப்பட்டுள்ளது.
Tags :



















