சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

by Editor / 01-07-2025 12:49:57pm
சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சிவகங்கை எஸ்.பி. ஆசிஸ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருபுவனம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் கஸ்டடி மரணம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். திருட்டு வழக்கில் விசாரணை என்ற பெயரில் அஜித்குமாரை அழைத்துச் சென்று காவலர்கள் அடித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 5 காவலர்கள் கைதான நிலையில், மாவட்ட எஸ்.பி. மீதும் தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

 

Tags :

Share via