மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் - துரைமுருகன்

by Editor / 10-01-2025 09:30:00am
மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் - துரைமுருகன்

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கண்டனம்.மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்,"அறிவிலிகளின் அவதூறுகளால் பெரியாரின் புகழை மறைக்க முடியாது"
"தெளிந்த உள்ளம் கொண்ட தலைவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் பெரியாரின் கருத்துகளை மதிப்பார்கள்""பெரியார் பற்றி அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான, மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம்""தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்க நினைத்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும்"என  திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

Tags : மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள் - துரைமுருகன்

Share via