நகை பறிக்க முயன்ற நபரை கட்டி வைத்து அடித்த ஊர்மக்கள்

திருவள்ளூர் மவாட்டம் திருத்தணி அருகே உள்ள தொழுதாவூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்முருகன். ஊர் பஞ்சாயத்து தலைவரான இவரது தாயார் சரஸ்வதி வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது.
இதனை நோட்டமிட்ட மர்நபர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி சரஸ்வதியை தாக்கி தங்கச்சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளர். அப்போது மூத்தாட்டி கூச்சலிட அந்த மர்ம வாலிபர் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதையடுத்து ஒன்று திரண்ட அப்பகுதி மக்கள் அந்த நபரை துரத்தி பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் மர்ம நபரின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கொள்ளையன் தாக்கியதில் படுகாயம் அடைந்த மூதாட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :