நாலாவது தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை

by Admin / 18-02-2026 01:16:09am
 நாலாவது தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நாலாவது தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் சில தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் 2030 ஆம் ஆண்டுக்குள் 33 சதவீத பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலம் முழுவதும் 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு வழங்கப்பட உள்ளதாகவும் அறிவித்ததோடு இந்திய அரசு 270 குள் கார்பன் சமநிலையை அடைய இலக்கு மென்னைத்து உள்ள நிலையில் தமிழ்நாடு அதற்கு முன்பே அந்த இலக்கை எட்டும் என்று முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார். கடல் சார் வளங்களை பாதுகாக்கவும் கடலோரப் பகுதிகளில் மேல் தன்மையை கூட்டவும் டிஎன் சோர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். தஞ்சாவூரில் சர்வதேச கடல் பசு பாதுகாப்பு அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கான விருதுகளையும் அவர் வழங்கினார் இந்த மாநாட்டினால் ஏற்படக்கூடிய கார்பன் உமிழ்வை சரி செய்யும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் மற்ற அரசு துறைகளும் இத்தகைய முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பிப்ரவரி ஆரம்பத்தில் தமிழ்நாடு நகர்ப்புற பசுமையாக்கள் கொள்கை 2026-யை தமிழக முதலமைச்சர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 நாலாவது தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை
 

Tags :

Share via
Logo