மனநிலை பாதித்து ரோட்டில் சுற்றித்திரிந்த பிரபல நடிகை

மேற்கு வங்கத்தில் பிரபல நடிகை சுமிர் ஹர் சௌத்ரி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தெருவில் சுற்றித் திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழுக்குச் சட்டை, அரைக்கால் ட்ரவுசருடன் சாலையோரம் அமர்ந்திருந்த அவரை, போலீசார் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். பல திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சுமிருக்கு, எதனால் இந்நிலை ஏற்பட்டது என தெரியவில்லை. இச்சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags :