கோவில்பட்டியில் மினி பஸ்சை ஏற்றி செய்தியாளரை கொல்ல முயற்சி..?  - வாகனம் சேதம்.

by Editor / 26-03-2023 11:31:04pm
கோவில்பட்டியில் மினி பஸ்சை ஏற்றி செய்தியாளரை கொல்ல முயற்சி..?  - வாகனம் சேதம்.

கோவில்பட்டி நகரில் மினிபஸ்களின் அட்டூழியங்கள் குறித்து தொடர்ந்து கோவில்பட்டி நியூஸ் 18 செய்தியாளர் மகேஸ்வரன் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.அதனுடைய கோபமோ என்னவோ ? அண்ணா பஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைத்திருந்த  அவரது  இரு சக்கர வாகனத்தின் மீது மினிபஸ் ஒன்று மோதி கண்ணாடி மற்றும் சில இடங்கள் சேதம் அடைந்துள்ளது.மினிபஸ் பின்பக்கமாக இடித்தை அருகில் இருந்த ஹோட்டல் ஊழியர் பார்த்துள்ளார். அவரும் இடித்த மினிபஸ் குறித்து தெரிவித்து விட்டார்.இது குறித்து அந்த மினிபஸ் ஊழியரிடம் செய்தியாளர் கேட்ட போது, நல்ல வேளை உங்கள் மீது இடிக்கவில்லை என்று சந்தோஷப்பட்டு கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.இச்சம்பவம் குறித்து காவல்துறையில் முறையாக அலைபேசியில் அழைத்து புகார் தெரிவித்தும்.. யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.வாகனத்தினை இடித்த மினிபஸ்சினை எடுக்க விடாமல் செய்தியாளர்கள் தடுத்த பின்னர் தான் காவல்துறையினர் வந்தனர்.அப்போது வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் யார் இடித்தது என்று கேட்டதற்கு, மினிபஸ் ஊழியர்கள் அவரையே மிரட்டும் தொனியில் பேசினர்.அது மட்டமல்லது காவல்துறையினர்  முன்பே மாலை முரசு செய்தியாளர் டேனியலை அவதூறாக பேசியது மட்டுமின்றி, அவருடைய கை பிடித்து தாக்கவும் முயற்சி செய்தனர்.இதற்கிடையில் கோவில்பட்டி தாசில்தார் சுசிலா நேரில் வந்து விசாரணை நடத்தினார்.மினிபஸ் ஊழியர்கள் மீது தவறு இருக்கிறது. மோட்டார் வாகன அலுவலர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் செய்தியாளர்கள் இருவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள வணிக நிறுவன முன்பக்க கண்காணிப்பு கேமராவில் வாகனம் இடித்தது சரியாக தெரியவில்லை. பின்பகுதியில் உள்ள  கண்காணிப்பு கேமராவில் மின்சாரம் இல்லை என்பதால் அந்த காட்சிகள் பதிவாகவில்லை.முன் பக்க காட்சிகளை பார்த்து போது உள்ளே வர  இடம் இருந்தும், செய்தியாளர் வாகனத்தினை ஒட்டி ஒரு அடி தூரத்தில் வளைந்து திரும்புகிறது. நிச்சயமாக அவ்வாறு திரும்பும் போது பின்பக்கம் இருக்கும் வாகனத்தினை இடித்து விட்டு தான் உள்ளே வர முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.இதற்கிடையில் மது போதையில் இருந்த சிலர் செய்தியாளர்களை மிரட்டும் தொனியில் பார்த்தது மட்டுமின்றி, அதில் ஒருவர் தனது கை சைகயினால் கொலை செய்து விடுவேன் என்று ஒரு மிரட்டலும் விடுத்தார்.அப்படி என்றால் எப்படி வேண்டும் என்றாலும் வண்டி ஓட்டுவோம்.. அப்படி தான் இடிப்போம், கேட்டால் கொலை செய்து விடுவோம் என்று ரவுடிகளை வைத்து மிரட்டுவோம் என்று சொல்லமல் சொல்கின்றனர்.அத்துணையும் விதிமுறைகளை மீறி மினிபஸ்கள் இயக்கப்படுகிறது. சில தினங்களாக ரெயில்வே நிலையத்திலும் அங்குள்ள ஆட்டோ டிரைவர்களிடம் பிரச்சினை செய்துள்ளனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்பு மினிபஸ்களில் மாணவர்கள் தொங்குவது குறித்தும்.. மினி பஸ்களின் அட்டூழியம் குறித்தும் செய்தியாளர் மகேஸ்வரன் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-

கோவில்பட்டியில் மினி பஸ்சை ஏற்றி செய்தியாளரை கொல்ல முயற்சி..?  - வாகனம் சேதம்.
 

Tags :

Share via