நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை விரைவில் அகற்றப்படும் நிதின்கட்கரி

by Editor / 04-08-2022 01:34:50pm
நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை விரைவில் அகற்றப்படும் நிதின்கட்கரி

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை விரைவில்அகற்றப்படும் என்றும் சுங்க கட்டணம் வசூலிக்க புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடு முழுவதும் 5 கோடியே ஐம்பத்தி ஆறு பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது நாள் ஒன்றுக்கு 120 கோடி ரூபாய் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தனர்.நாடு  முழுவதும் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை விரைவில் அகற்றப்படும் என்றும் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலையும் வாகன நெரிசல் இருக்காது எனவும் அவர் உறுதியளித்தார் அதேநேரம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் மாற்று முறையில் சுங்க கட்டணம் வசூலிக்க இரண்டு வழிகளே அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார். வாகனங்களில் பொருத்தப்படும் ஜிபிஎஸ் கருவி மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பொருத்தப்பட்டு மென்பொருள் தயாரித்து கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்னதாக பேசிய திமுக உறுப்பினர் பி வில்சன் மாநிலம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இயந்திரமான மானதாக ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தி வருவதாகவும் அரசு போக்குவரத்து பேருந்துகள் மற்றும் மாநில அரசு வாகனங்களுடன் கட்டணம் வசூலிக்கப்படும் அவர் குறிப்பிட்டார். உறுப்பினர் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி  நகர எல்லையில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என தெரிவித்தார்.

 

Tags :

Share via

More stories